TNPSC Thervupettagam

மத்திய பொது பட்ஜெட் - 2018

February 3 , 2018 2489 days 833 0
  • 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை நான்காவது முறையாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
  • இது ஆளும் NDA அரசின் கடைசி முழு பட்ஜெட்டாகும்.
  • GST-ன் அமலுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் வருடாந்திர பட்ஜெட் இதுவாகும்.

மத்திய பொது பட்ஜெட்

  • மத்திய பொது பட்ஜெட்டானது ஓர் வருடாந்திர நிதி நிலை அறிக்கை என இந்திய அரசியலமைப்பின் விதி 112-ல் விவரிக்கப்பட்டுள்ளது.
  • 2016 வரை மத்திய பட்ஜெட்டானது பிப்ரவரி மாதத்தின் கடைசி அலுவலக தினத்தன்று தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
  • ஆனால் 2017ஆம் ஆண்டு முதல் பொது பட்ஜெட் ஆனது பிப்ரவரி மாதத்தின் முதல் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.
  • புதிய நிதி ஆண்டின் தொடக்கமான ஏப்ரல் மாதத்தின் தொடக்கம் முதலே பட்ஜெட் கூறுகளை செயல்படுத்துவதற்காக வேண்டி இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
  • சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டானது 1947, நவம்பர் 26 அன்று நாட்டின் முதல் நிதி அமைச்சரானஷண்முகம் செட்டியாரால் தாக்கல் செய்யப்பட்டது.
  • 1970-71ல் பிரதமர் இந்திரா காந்தி பட்ஜெட் தாக்கல் செய்தார். நாட்டில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல் மற்றும் ஒரே பெண் இவரேயாவார்.
  • இந்தியாவின் முன்னாள் பிரதமரும் நிதி அமைச்சருமான மெரார்ஜி தேசாய் இது வரை அதிகபட்சமாக 10 முறை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
  • பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், பொது பட்ஜெட்டின் ஒரு பகுதியாகவே ரயில்வே பட்ஜெட் இருந்தது.
  • ஆனால், 1924ஆம் ஆண்டு ஆக்வோர்த் கமிட்டியின் (Acworth Committee) பரிந்துரையின் அடிப்படையில் முதல் முறையாக இரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டிலிருந்து பிரிக்கப்பட்டது.
  • 2017ஆம் ஆண்டு இரயில்வே பட்ஜெட்டானது பிபேக் தேப்ராய் குழுவின் (Bibek Debroy Committee) பரிந்துரையின் அடிப்படையில் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்