TNPSC Thervupettagam

மத்திய வங்கியின் எண்ணிம நாணயத்தினை ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்பு

February 10 , 2023 653 days 309 0
  • ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனமானது, ரிசர்வ் வங்கியின் எண்ணிம ரூபாய் மூலமான சில்லறை விற்பனைக் கட்டணங்களை ஏற்கத் தொடங்கியுள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளது.
  • இதன் மூலம், மத்திய வங்கி எண்ணிம நாணயத்தை (CBDC) ஏற்றுக் கொண்ட முதல் இந்திய சில்லறை விற்பனையாளர் நிறுவனம் இதுவாகும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, தனது முதலாவது சோதனை அடிப்படையிலான சில்லறை எண்ணிம ரூபாயினை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதியன்று அறிமுகப் படுத்தியது.
  • இந்த நாணயமானது சட்டப்பூர்வ அனுமதியினைக் குறிக்கும் எண்ணிம வில்லை வடிவத்தில் கிடைக்கிறது.
  • மத்திய வங்கி எண்ணிம நாணயம் (CBDC) ஆனது காகிதத்தாள் மற்றும் நாணயங்களின் அதே மதிப்பில்  வெளியிடப்பட்டுள்ளது.
  • மத்திய வங்கி எண்ணிம நாணயம் என்பது பணத்தாளுடன் சேர்ந்து புழக்கத்தில் இருக்கும் ஃபியட் பணத்தின் (அரசின் ஒப்புதல் பெற்ற பிற நாணய வடிவங்கள்) எண்ணிம வடிவமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்