மத்ஸ்ய சேவா கேந்திரங்கள் மற்றும் சாகர் மித்ராக்கள்
December 29 , 2024 62 days 89 0
மத்ஸ்ய சேவா கேந்திராக்கள் மற்றும் சாகர் மித்ராக்கள் ஆகியன உற்பத்தித் திறன் மற்றும் நிலைத் தன்மையை மேம்படுத்துவதற்கான முக்கிய ஆதரவு, பயிற்சி மற்றும் தகவல்களை வழங்குவதன் மூலம் மீனவர்களுக்கு உதவுகின்றன.
2013-14 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவின் தேசிய மீன் உற்பத்தி 83% அதிகரித்து, 2022-23 ஆம் ஆண்டில் 175 லட்சம் டன் என்ற அதிகபட்ச அளவினை எட்டியுள்ளது.
இதில் 75% ஆனது உள்நாட்டு மீன்வளத்திலிருந்து உற்பத்தியாகிறது.
உலக அளவில் மீன் மற்றும் மீன் வளர்ப்பு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது.
‘மத்ஸ்ய சேவா கேந்திராக்கள்’ (MSK), நன்கு பயிற்சி பெற்ற மீன்வளர்ப்பு நிபுணர்களால் பலவிதமான பல்துறை சேவைகளை வழங்குவதற்கான ஒரு ஒற்றைத் தீர்வாகக் கருதப் படுகிறது.
பெண்கள் மற்றும் மிகவும் நலிவடைந்த பிரிவினர்கள் இத்தகைய மையங்களை அமைப்பதற்கான உதவியில் அரசின் பங்கு 60% ஆக உள்ளது.
கடலோர மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள “சாகர் மித்ராக்கள்” அரசாங்கத்திற்கும் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கும் இடையே ஒரு முக்கிய இடைமுகமாகப் பங்காற்றுகிறது.
அவை தினசரி கடல் மீன்பிடித்தல், விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் மீன் இறக்கு மையங்கள்/துறைமுகங்களில் தேவையானச் சந்தைப்படுத்துதல் தேவைகள் பற்றிய தகவல் மற்றும் தரவுகளை தொகுத்து வழங்குகின்றன.
அவை உள்ளூர் விதிமுறைகள், வானிலை முன்னறிவிப்புகள், இயற்கைச் சீற்றங்கள், சுகாதாரமான முறையில் மீன்களைக் கையாளுதல், மற்றும் கடலில் சாத்தியமான மீன்பிடி மண்டலங்கள் பற்றியத் தகவல்களை மீனவர்களுக்குப் பரப்புகின்றன.