எந்த ஓர் உண்மையான சமய நம்பிக்கையும் இல்லாமல், பெரும்பாலும் ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட மத மாற்றம் ஆனது, இடஒதுக்கீட்டுக் கொள்கையின் சமூக நெறிமுறைகளை வீழ்த்துவதற்குச் சமம் என்றும், அரசியல் அமைப்பின் மீதான மோசடிக்கு சமமானது என்றும் உச்ச நீதிமன்றம் (செல்வ ராணி வழக்கு) கூறியுள்ளது.
பிறப்பால் கிறிஸ்தவரான புதுச்சேரியைச் சேர்ந்த செல்வராணி என்ற பெண் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர் இந்து மதத்தைத் தழுவியதாகக் கூறி, பட்டியலிடப்பட்டச் சாதியினர் சமூகச் சான்றிதழை வழங்குமாறு கோரினார்.
ஒருவர் மாறுகின்ற மற்றொரு மதத்தின் மீது உண்மையான நம்பிக்கை இல்லாமல் இருந்து, இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவதே அந்த மதமாற்றத்தின் நோக்கமாக கொண்டிருந்தால் இவ்வாறு சான்றிதழ் வழங்க முடியாது என நீதிமன்றம் கூறியது.