இது அமெரிக்கக் கொள்கை வகுக்கும் அமைப்பான கேட்டோ மையம் மற்றும் கனடாவில் உள்ள பிரேசர் நிறுவனம் அகியவற்றினால் வெளியிடப்பட்டுள்ளது.
இது குடிமையியல், பொருளாதாரம் மற்றும் தனிப்பட்டச் சுதந்திரம் ஆகியவற்றின் மீதான ஒரு உலகளாவியத் தரவரிசையாகும்.
இது 2008 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 162 நாடுகளைத் தரவரிசைப் படுத்துவதற்காக தனிப்பட்ட, குடிமை மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தின் 76 குறிகாட்டிகளை எடுத்துக் கொண்டு உள்ளது.
இது 162 நாடுகளில் இந்தியாவை 111வது இடத்தில் தரவரிசைப்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஹாங்காங் ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் சிரியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.