TNPSC Thervupettagam

மனிதனால் உருவாக்கப்பட்ட 2வது மிகப்பெரிய மீத்தேன் கசிவு நிகழ்வு

March 13 , 2024 128 days 204 0
  • தென்மேற்கு கஜகஸ்தானின் மங்கிஸ்டாவ் பகுதியில் உள்ள ஒரு எண்ணெய்க் கிணற்றில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தோண்டுதல் நடவடிக்கை ஆனது மனிதனால் உருவாக்கப்பட்ட இரண்டாவது பெரிய மீத்தேன் கசிவு நிகழ்வாகும்.
  • எண்ணெய்க் கிணற்றில் மேற்கொள்ளப்பட்ட தோண்டுதல் நடவடிக்கை ஆனது 2023 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் ஒரு தீ விபத்தினை ஏற்படுத்தியதன் காரணமாக 127,000 டன் மீத்தேன் வளிமண்டலத்தில் வெளியானது.
  • மீத்தேன் ஓர் ஆற்றல் வாய்ந்த பசுமை இல்ல வாயு ஆகும்.
  • புதைபடிவ எரிபொருள் எடுப்புச் செயல்பாடுகளிலிருந்து வெளிவரும் மீத்தேன் கசிவு ஆனது மிகப்பெரிய மீத்தேன் உமிழ்வு மூலமாக உள்ளது.
  • மனிதனால் ஏற்படும் மீத்தேன் உமிழ்வுகளில் சுமார் 40% உமிழ்வானது இத்தகைய செயல்பாடுகளால் வெளியாகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்