TNPSC Thervupettagam

மனிதன் மற்றும் யானை இனங்கள் இடையிலான சூழலியல் சார்ந்த மோதல்

January 25 , 2023 675 days 348 0
  • ஒடிசா அரசானது, யானைகளைப் பாதுகாப்பதற்காகவும், மனிதன் மற்றும் யானை இனங்கள் இடையிலான சூழலியல் சார்ந்த மோதலைத் தணிப்பதற்காகவும் ஒரு விரிவான செயல் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதன்படி அம்மாநிலமானது நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • மூன்று யானைகள் காப்பகங்களைக் கொண்டிருக்கும் மண்டலம் I - என்பது 'யானை பாதுகாப்பு மண்டலமாக' விளங்கும்.
  • மண்டலம் II ஆனது, வாழ்விடத்தின் தரம் மற்றும் வாழ்தகவுத் திறனை அதிகரிக்கச் செய்வதற்காகவும், நீண்டகால உத்திகள் மூலம் மோதலைக் குறைப்பதற்காகவும் ஒரு சகவாழ்வு மண்டலமாக பேணி காக்கப்படும்.
  • மண்டலம் III ஆனது, குறுகிய கால உத்திகள் மூலம் மோதலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் ஒரு மோதல் தணிப்பு மண்டலமாக இருக்கும்.
  • மண்டலம் IV என்பது யானைகள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியாக இருக்கும்.
  • இந்த மண்டலத்தில் சுற்றித் திரியும் யானைகள் பிடிக்கப்பட்டு, அவை எங்கிருந்து வந்தன என்று அடையாளம் காணப்பட்டு அவை அந்த இடங்களுக்கு உடனடியாக இட மாற்றம் செய்யப் படும்.
  • கடந்த ஒன்பது ஆண்டுகளில், ஒடிசாவில் 700 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில், மனிதன் மற்றும் யானை ஆகியவற்றுக்கு இடையிலான சூழலியல் சார்ந்த மோதலால் ஏற்பட்ட மனித உயிரிழப்பு 860 என்ற எண்ணிக்கையினை எட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்