நாசா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆண்டுகள் பழமையான ஆய்வுத் திட்டத்தின் குப்பைகள் ஆனது மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் விண்கல் பொழிவிற்குக் காரணமாக அமையலாம்.
நாசாவின் இரட்டை குறுங்கோள் திசை மாற்று சோதனை (DART) கலம் ஆனது, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டிமார்போஸ் எனப்படும் ஒரு சிறிய குறுங்கோளுடன் மோதச் செய்யப்பட்டது.
இது இந்த தனித்துவமான நிகழ்வை ஏற்படுத்தலாம்.
இத்திட்டம் ஆனது குறுங்கோள் திசைமாற்று தொழில்நுட்பத்தை சோதிக்கும் நோக்கம் கொண்டது.
இந்த நிகழ்வானது தற்போது 10 முதல் 30 ஆண்டுகளுக்குள் பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி விண்கல் பொழிவினை உருவாக்கக் கூடிய சுமார் 2 மில்லியன் பவுண்டுகளுக்கு மேலான குப்பைகளை உருவாக்கியதாக அறிவியல் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
மோதலின் காரணமாக, டிமார்போஸ் குறுங்கோளிலிருந்து வரும் உடைந்த துண்டுகள் குறைந்தது 100 ஆண்டுகளுக்கு பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையிடையே மற்றும் அவ்வப்போது வந்து சேரும்.
மணிக்கு சுமார் 1,118 மைல் வேகத்தில் செல்லும் குப்பைகள் செவ்வாய்க் கிரகத்தை அடையலாம்.
மணிக்கு சுமார் 3,579 மைல் வேகத்தில் நகரும் சிறிய மற்றும் வேகமான துகள்கள் 10 ஆண்டுகளுக்குள் பூமியை அடையலாம்.