2024 ஆம் ஆண்டில், புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயான மனித ஆப்பிரிக்க டிரிபனோசோமியாசிஸ் (HAT) - தூக்க வியாதி - என்ற நோயினை அகற்றிய உலகின் 51 ஆவது நாடாகவும், முதல் நாடாகவும் சாட் மாறியுள்ளது.
HAT ஆனது பாதிக்கப்பட்ட செட்சி வகை ஈக்கள் மூலம் பரவும் புரோட்டோசோவா ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது.
இந்த நோய் ஆனது சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டால் உயிருக்கு ஆபத்தானதாகும்.
HAT நோய்ப் பாதிப்பில் இரண்டு வடிவங்கள் உள்ளன என்ற நிலையில் அவை சம்பந்தப் பட்ட ஒட்டு உண்ணியின் கிளையினங்களால் தீர்மானிக்கப்படுகின்றன:
டிரிபனோசோமா புரூசி கேம்பியன்ஸ் என்பது பதிவாகியுள்ள 92% பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளது;
டிரிபனோசோமா புரூசி ரோடீசியன்ஸ் மீதமுள்ள 8 சதவீதப் பாதிப்புகளுக்கு காரணமாகும்.