நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், மூளைச் சாவு அடைந்த ஒரு மனிதரின் உடலில் மரபணு மாற்றப்பட்ட ஒரு பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி வெற்றி கண்டுள்ளனர்.
விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களின் உடலில் பொருத்தும் சிகிச்சை செநோடிரான்ஸ்பிளான்டேஷன் (Xenotransplantation) எனப்படுகிறது.
இதுவரையில், மனித நோயெதிர்ப்பு அமைப்பானது பல நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகள் செலுத்தப் பட்ட போதிலும் பல்வேறு அந்நியத் திசுக்களைத் தாக்குவதால் இவ்வகையில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் பெரும்பாலும் தோல்வி அடைந்துள்ளன.