TNPSC Thervupettagam

மனித உடல் மீதான உலகின் முதல் முப்பரிமாண வண்ண X - கதிர்வீச்சு

July 14 , 2018 2325 days 720 0
  • நியூசிலாந்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உலகின் முதல் முப்பரிமாண X-கதிர் வீச்சினை மனித உடல் மீது செயல்படுத்தியுள்ளனர். இது மருத்துவத்துறையில் நோய்க் கண்டறிதலை மேம்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.
  • இந்த புதிய சாதனம் பாரம்பரிய கருப்பு மற்றும் வெள்ளை X-கதிர் வீச்சினை அடிப்படையாகக் கொண்டது.
  • ஆனால் இது மெடிப்பிக்ஸ் என்று அழைக்கப்படும் அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பினால் (European Organisation for Nuclear Research) உருவாக்கப்பட்ட துகள்களை கண்காணிக்கும் (particles detecting) தொழில் நுட்பத்தினைக் கொண்டுள்ளது.
  • மெடிப்பிக்ஸ் (medipix) அதன் திரை திறந்திருக்கும் போது பிக்சல்களுடன் மோதும் தனிப்பட்ட துணை – அணுத் துகள்களை கண்டறியும் மற்றும் எண்ணும் புகைப்படக் கருவி போல் செயலாற்றும்.
  • இது பெரும் ஒப்புப் படித்திறன் மற்றும் உயர் பிரிதிறன் கொண்ட புகைப்படங்களுக்கு இசைகிறது.
  • இந்த தொழில்நுட்பமானது நியூசிலாந்தின் MARS உயிரியப் புகைப்பட நிறுவனத்தினால் வணிக ரீதியாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்