மனித உரிமைகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மைல்கற்கள்
December 19 , 2024 3 days 40 0
மனித உரிமைகளுக்கான ஒன்றிய சங்கம் (UAHR) ஆனது, ஐக்கிய அரபு அமீரகம் மனித உரிமைகளில் கண்டுள்ள அதன் முன்னேற்றத்திற்காக அதனைப் பாராட்டியுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டிற்கானப் பாலினச் சமத்துவமின்மை குறியீட்டில் உலக அளவில் ஏழாவது இடத்தையும், பிராந்திய அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது.
தொழிலாளர்-நிறுவன மோதல்கள் இல்லாத நாடுகள் குறியீட்டிலும் இந்த நாடானது உலகிலேயே முன்னணியில் உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில், கல்வி மற்றும் வீட்டுவசதி ஆகியவை அரசியலமைப்பு உரிமைகள் ஆக உள்ளன; அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது; மற்றும் மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை ஆதரிக்கும் விதமாக ஒரு சமூக நல அமைப்பு அமைக்கப் பட்டு உள்ளது.
அந்நாட்டின் சட்டமானது, பாகுபாட்டிலிருந்து மக்களைப் பாதுகாத்து, வாழ்வதற்கான உரிமை, பாதுகாப்பு, நம்பிக்கை சுதந்திரம் மற்றும் மத நடைமுறைகளுக்குப் பெரும் உத்தரவாதம் அளிக்கிறது.
குழந்தைகள், பெண்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் (மிக உறுதியானவர்கள்) மற்றும் பிற எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் உரிமைகள் மீதும் அந்நாட்டின் அரசியலமைப்பு சிறப்பு கவனம் செலுத்துகிறது.