TNPSC Thervupettagam

மனித ஓரின நகல் நோய் எதிர்ப்பொருள் – இந்தியா

May 13 , 2020 1660 days 676 0
  • அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமானது ஓரின நகல் நோய் எதிர்ப்பொருளை (hmAbs - human monoclonal antibodies) மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • இது கோவிட் – 19 நோய்த் தொற்றிற்கான ஒரு சிகிச்சை முறையாக செயல்பட இருக்கின்றது.
  • இந்தத் திட்டமானது கோவிட் – 19 நோயிலிருந்து குணமாகிய நபரிடமிருந்து hmAbs ஆனது பெறப்பட இருக்கின்றது.
  • ஓரின நகல் நோய் எதிர்ப்பொருள் ஆனது வைரசைச் சமநிலைப்படுத்த இருக்கின்றது. இது வைரசைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நோய்த் தொற்றைத் தடை செய்யும் திறன் கொண்டது. இது கோவிட் – 19 நோய்த்தொற்றை திறனற்றதாக மாற்றுகின்றது.
  • ஓரின நகல் நோய் எதிர்ப்பொருளைப் பிரித்தெடுத்த முதலாவது நாடு இஸ்ரேல் ஆகும். 
  • இந்த மன்றமானது தனது தலைமைத்துவ திட்டமான “புதிய புத்தாயிரம் இந்தியத் தொழில்நுட்ப தலைமைத்துவ முன்னெடுப்புத் திட்டம்” (NMITLI - New Millennium Indian Technology Leadership Initiative Programme) என்பதின் கீழ் இதனை மேற்கொண்டு வருகின்றது.
  • இது நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் மிகப்பெரிய பொது-தனியார் பங்களிப்பாகும் (PPP - Public-private partnership).
  • இந்தத் திட்டத்தில் பொதுச் சுகாதார அவசர நிலைக்காக இந்தூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், புனேவில் உள்ள தேசிய நுண்ணுயிரி அறிவியல் மையம், குருகிராமில் உள்ள பிரெட்டோமிக்ஸ் மற்றும் பாரத்-பயோடெக் தொழில்நுட்பத் தொழிற்சாலை ஆகியவை கலந்து கொள்ள இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்