மனித தோல் செல்களைப் பல் செல்லாக்க குருத்தணுவாக (ப்ளூரிபோடென்ட் ஸ்டெம் செல்களாக) மாற்றச் செய்வதற்கான தொழில்நுட்பத்தை இந்திய ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
இது தூண்டப்பட்ட பல் செல்லாக்க குருத்தணு (iPSCs) என்று அறியப் படுகிறது.
பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் தனிப் பயனாக்கப்பட்ட பல்வேறு குருத்தணுச் சிகிச்சைகளை வழங்க இந்த ஆராய்ச்சி வழி வகுக்கிறது.
இந்த iPSC செல்கள் குறிப்பிட்ட நோயாளிகளுக்காக பயன்படுத்தக் கூடியது என்பதோடு இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் போது நோயெதிர்ப்பு நிராகரிப்பு அபாயத்தைக் குறைக்கிறது.