TNPSC Thervupettagam

மனித வளர்ச்சிக் குறியீடு 2020

December 19 , 2020 1361 days 5279 0
  • ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டமானது சமீபத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் இதன் கருத்துரு மனித மேம்பாடு மற்றும் மானுடவியல் என்பது ஆகும்.
  • இது 2019 ஆம் ஆண்டிற்கான HDI (Human Development index) தரவரிசைகளை வழங்குகிறது.
  • இந்த ஆண்டின் அறிக்கை "கோள் அழுத்தங்களுக்கு" (planetary pressures) ஏற்ப அமைந்துள்ளது.
  • இதன் பொருள், கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு மற்றும் கரிமப் பொருள் தடம் ஆகிய ஒவ்வொன்றையும் ஒரு தனிநபரின் அடிப்படையில் வைத்து ஒரு நாட்டின் நிலையான மனித வளர்ச்சிக் குறியீட்டைச் சரி செய்வதாகும்.
  • 189 நாடுகளில் இந்தியா 131வது இடத்திற்குச் சரிந்தது.
  • இந்த அறிக்கையில் நார்வே, அயர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.
  • இதன் உலகத் தரவரிசையில் ஹாங்காங் நான்காவது இடத்தையும், ஐஸ்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவை ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களையும் பிடித்துள்ளன.
  • இந்த அறிக்கையில் சீனா 85வது இடத்திலும், பாகிஸ்தான் 154வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவின் செயல்திறன்

  • இந்தியாவின் மனித மேம்பாட்டுக் குறியீடு 0.640 புள்ளிகளாக இருந்தது.
  • 2019 ஆம் ஆண்டில் இந்தியர்களின் பிறப்பின் போதான சராசரி வாழ்நாள் ஆயுட் காலம் 69.7 ஆண்டுகளாகும்.
  • வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியாவின் மொத்தத் தேசிய வருமானம் 2018 ஆம் ஆண்டில் 6,829 அமெரிக்க டாலர்களிலிருந்து 2019 ஆம் ஆண்டில் 6,681 அமெரிக்க டாலர்களாக சரிந்தது.
  • நிறுவப்பட்ட சூரிய மின் உற்பத்தித் திறன் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் HDI மதிப்பு 0.645 ஆகும்.
  • 2018 ஆம் ஆண்டில் இந்தியா 130வது இடத்தில் இருந்தது.
  • இது நடுத்தர மனித மேம்பாட்டுப் பிரிவில் உள்ளது.
  • 1990 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவின் HDI மதிப்பு 0.429 என்ற புள்ளியிலிருந்து 0.645 என்ற புள்ளியாக உயர்ந்துள்ளது (50.3 சதவீதம் அதிகரித்து உள்ளது).
  • 1990 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவின் பிறப்பின் போதான வாழ்நாள் எதிர்பார்ப்பானது 11.8 ஆண்டுகள் அதிகரித்துள்ளது, சராசரி பள்ளிப் படிப்பு ஆண்டுகள் 3.5 ஆண்டுகள் அதிகரித்து உள்ளன, மேலும் பள்ளிப் படிப்பின் எதிர்பார்க்கப் பட்ட ஆண்டுகள் 4.5 ஆண்டுகள் அதிகரித்து உள்ளன.
  • இந்தியாவின் தனிநபர் அடிப்படையிலான மொத்த தேசிய வருமானமானது 1990 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 273.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • இந்தியாவில் சூரிய ஒளி உற்பத்தித் திறனானது 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2.6 ஜிகா வாட்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு ஜூலையில் 30 ஜிகா வாட்டாக அதிகரித்து உள்ளது.

HDI பற்றி

  • இது முதன்முதலில் 1990 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற இந்தியரான அமர்த்தியா சென் மற்றும் பாகிஸ்தான் பொருளாதார நிபுணர் மஹ்பூப் உல் ஹக் ஆகியோரால் தொடங்கப் பட்டது.
  • இது மனித வளர்ச்சியின் மூன்று பரிமாணங்களில் சராசரி சாதனை என்று அளவிடப் படுகிறது.
  • இது ஆயுட்காலம், கல்வி மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்