TNPSC Thervupettagam

மனித வள மேம்பாட்டுக் குறியீடு 2023-24

March 22 , 2024 247 days 4788 0
  • 2023/24 ஆம் ஆண்டிற்கான மனித வள மேம்பாட்டுக் குறியீட்டு அறிக்கையானது, “இடையூறுகளைத் தகர்த்தல்: பிரிவினை மிகுந்த உலகில் பெரும் ஒத்துழைப்பினை மீளுருவாக்குதல்” என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டில் மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியாவின் மதிப்பு 0.644 ஆக அதிகரித்து, 193 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 134 வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • பணக்கார நாடுகள் அதிக அளவிலான மனித வள மேம்பாட்டு நிலையை அடைந்து உள்ள நிலையில், ஏழ்மை நிலையில் உள்ள பாதி நாடுகள் பெரும் முன்னேற்றத்தின் நெருக்கடிக்கு முந்தைய நிலைக்கு கீழே உள்ளன.
  • 2022 ஆம் ஆண்டின் மனித மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியா ஆயுட்காலம், கல்வி மற்றும் தனிநபர் மொத்தத் தேசிய வருமானம் என அனைத்துக் குறிகாட்டிகளிலும் முன்னேற்றங்களைக் கண்டது.
  • ஆயுட்காலம் (வாழ்நாள் எதிர்பார்ப்பு) ஆனது சுமார் 67.2லிருந்து 67.7 ஆக உயர்ந்தது என்ற நிலையில் எதிர்பார்க்கப் பட்ட பள்ளிக் கல்வி ஆண்டுகள் சுமார் 12.6 என்ற எண்ணிக்கையினை எட்டியது.
  • சராசரி பள்ளிக் கல்வி ஆண்டுகள் சுமார் 6.57 ஆகவும், தனிநபர் மொத்த தேசிய வருமானத்தின் தனிநபர் தொகை சுமார் 6,542 டாலரிலிருந்து 6,951 டாலராகவும் அதிகரித்துள்ளது.
  • பாலினச் சமத்துவமின்மையை குறைப்பதில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.
  • இந்தியாவின் உலகச் சமத்துவமின்மைக் குறியீட்டு மதிப்பு (0.437) என்ற உலகளாவிய மதிப்பை விடவும், தெற்காசியச் சராசரியை விடவும் சிறப்பாக உள்ளது.
  • இந்தியா பாலினச் சமத்துவமின்மையைக் குறைப்பதில் முன்னேற்றத்தைக் கண்டு உள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டு உலகச் சமத்துவமின்மைக் குறியீட்டில் மதிப்பிடப் பட்ட 166 நாடுகளில் 108வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்