TNPSC Thervupettagam

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்டங்கள்

November 8 , 2017 2603 days 1988 0
சின்தன் ஷிவிர்
  • மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் கல்வியறிவுத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட “சின்தன் ஷிவிர்” எனும் இரு நாள் தேசியப் பயிலரங்கை டெல்லியில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு பொருத்தமான தொடர்புடைய முழுமைப்பெற்ற கல்வியை வழங்குவதே இந்தப் பயிலரங்கத்தின் குறிக்கோளாகும்.
  • இந்திய கல்வித் துறையில் உள்ள முக்கிய கல்விக் கருத்துருக்களில் திட்ட ஆராய்வுகளை மேற்கொள்வதற்காக அரசுசாரா தொண்டு நிறுவனம், தனியார் துறை மற்றும் தனிநபர்கள் போன்ற பல பங்குதாரர்களை ஒருசேர குழுமிப்பதை நோக்கமாகக் கொண்டது இப்பயிலரங்கம்.
ஷாலாசாரதி
  • மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது “ஷாலாசாரதி” எனும் மாநிலங்கள் – அரசு தொண்டு நிறுவனங்கள் – பெருநிறுவன சமூக பொறுப்பு (State-NGO-CSR Portal) இணையவாயிலை தொடங்கியுள்ளது.
  • “ஷாலா சித்தி” என்பது ஓர் நன்கு வரையறுக்கப்பட்ட, தர அடிப்படையிலான அளவுருக்களின் மீது கவனமிடப்பட்ட விரிவான பள்ளி மதிப்பீட்டு இணையவாயில் அமைப்பாகும்.
  • இது மேம்பாட்டிற்காக தொழிற்முறை தீர்ப்புகளை பள்ளிகள் மேற்கொள்ள வகை செய்யும்.
  • பல்வேறு பள்ளிகளில் புத்தாக்க முயற்சிகளைப் பகிர்வதற்காக பங்குதாரர்களின் கூட்டிணைவிற்கு உதவ மாநிலங்கள் – அரசு தொண்டு நிறுவனங்கள் – பெருநிறுவன சமூக பொறுப்புகளின் பங்களிப்பால் உருவாக்கப்பட்டதே இந்த State-NGO-CSR இணையவாயிலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்