TNPSC Thervupettagam

மனித விண்வெளிப் பயணத்திற்கான சர்வதேச தினம் - ஏப்ரல் 12

April 14 , 2020 1689 days 476 0
  • 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதியில் யூரி காகரின் என்ற சோவியத்தைச் சேர்ந்த நபரால் முதலாவது மனித விண்வெளிப் பயணமானது மேற்கொள்ளப் பட்டது.
  • மனித விண்வெளிப் பயணத்தின் 50வது நினைவு தினக் கொண்டாட்டங்களுக்கு சில தினங்களுக்கு முன்னதாக, 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 07 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 65வது அமர்வில் இத்தினமானது தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • யூரி காகரின் என்பவர் பூமியைச் சுற்றி வலம் வந்த முதலாவது மனிதராக உருவெடுத்துள்ளார். இவர் மனித விண்வெளிப் பயணம் என்ற ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தார்.
  • ஏப்ரல் 12 ஆம் தேதியானது 1981 ஆம் ஆண்டில் கொலம்பியாவில் STS – 1 என்ற முதலாவது விண்வெளி விண்கலம் ஏவப்பட்டதைக் குறிக்கின்றது. இத்தினத்தன்று இந்த ஏவுதலும் அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்