TNPSC Thervupettagam

மன்னார் வளைகுடாவில் உள்ள உயிருள்ள பவளப்பாறைகளின் பங்கு

March 3 , 2024 138 days 293 0
  • ‘மன்னார் வளைகுடாவின் பவளப்பாறைகள்: நிலை மற்றும் மேலாண்மை முறைகளில் உள்ள பத்தாண்டு கால மாற்றங்கள்’ என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையானது சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பருவநிலை உச்சி மாநாடு 2.0 என்ற நிகழ்வில் வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்தியாவின் முக்கிய பவளப்பாறைப் பகுதிகளில் ஒன்றான மன்னார் வளைகுடாவில் 2005 ஆம் ஆண்டில் 37% ஆக இருந்த உயிருள்ள பவளப்பாறைகளின் சராசரி பரவல் ஆனது 2021 ஆம் ஆண்டில் 27.3% ஆகக் குறைந்தது.
  • உயிருள்ள பவளப்பாறைகளின் பங்கு 2009 ஆம் ஆண்டில் 42.9% என்ற வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.
  • இரண்டாவது (2010) மற்றும் மூன்றாவது (2016) உலகளாவிய பவளப்பாறை நிறமாற்ற நிகழ்வுகள் காரணமாக பெரும்பாலான பவளப்பாறைகள் அழிந்ததன் காரணமாக அவற்றின் எண்ணிக்கை குறைந்தது.
  • கீழக்கரை மற்றும் தூத்துக்குடி பகுதிகளை விட மண்டபம் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
  • 2005 ஆம் ஆண்டின் முதல்நிலைக் கணக்கெடுப்பில் 117 பவளப்பாறை இனங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், புதுப்பிக்கப்பட்ட பெயரிடல் ஆனது அந்த எண்ணிக்கையை 132 ஆக உயர்த்தியதுடன் 2021 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அடுத்தடுத்த கணக்கெடுப்புகளில் மேலும் அதிக எண்ணிக்கையிலான பவளப் பாறைகள் பதிவு செய்யப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்