வடகிழக்கு பிலிப்பைன்ஸில் உள்ள புகழ்பெற்ற எரிமலையான மயோன், சமீப காலமாக எரிமலைக் குழம்புகளைத் தொடர்ந்து வெடித்துச் சிதறிவதால், சுமார் 13,000 பேர் அங்கிருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர்.
மயோன் எரிமலை என்பது பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு லூசான் பகுதியில் உள்ள ஒரு செயல்படும் எரிமலை ஆகும்.
தரகாங் மயோன் (அழகான பெண்) இது உள்ளூர் வார்த்தையிலிருந்துப் பெறப்பட்டது.
அதன் வடிவத்தின் சமச்சீர் தன்மையின் காரணமாக இது உலகின் மிகச் சரியான எரிமலைக் கூம்பு என்று அழைக்கப் படுகிறது.
பசிபிக் பெருங்கடலின் படுகையில் உள்ள பெரும்பாலானப் பகுதிகளில் பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படுகின்ற பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் இது அமைந்துள்ளது.