உலக வர்த்தக அமைப்பினை நிறுவ காரணமாக அமைந்த மரகேஷ் ஒப்பந்தம் 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியன்று கையெழுத்தானது.
இது 1995 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று உலக வர்த்தக அமைப்பின் உருவாக்கத்திற்கு வழி வகுத்தது.
உலக வர்த்தக அமைப்பானது, கட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தத்தின் (GATT) கொள்கைகளை ஒருங்கிணைத்து, அவற்றைச் செயல் படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்குமான மிகவும் நிலையான நிறுவன கட்டமைப்பு முறையினை வழங்குகிறது.
தற்போது, உலக வர்த்தக அமைப்பானது 164 உறுப்பினர் நாடுகளையும் 23 பார்வையாளர் அரசாங்கங்களையும் கொண்டுள்ளது.