வெப்ப மண்டலப் புல்வெளிகள் மற்றும் புல்வெளிகள் போன்ற திறந்தவெளி சுற்றுச் சூழல் அமைப்புகளில் அதிகமான மரங்கள் காணப்படுவது உள்நாட்டு புல்வெளி வாழ் பறவைகளின் எண்ணிக்கையை மிக கணிசமாகக் குறைத்துள்ளன என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஆப்பிரிக்க வெப்ப மண்டலப் புல்வெளி வாழ் பறவைகளின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது.
புல்வெளிகள் மற்றும் வெப்ப மண்டலப் புல்வெளிகள் ஆனது பூமியின் மொத்த நிலப் பரப்பில் சுமார் 40% பகுதியினை ஆக்கிரமித்துள்ளன, மேலும் அவை பல உள்நாட்டு மற்றும் ஆபத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளின் தாயகமாக உள்ளன.
புல்வெளி வாழ்விடங்களின் பரப்பு ஆனது 34% குறைந்துள்ளதோடு, இந்த இடங்களில் மரங்களின் பரவல் 8.7% அதிகரித்துள்ளது.
தற்போதையப் பருவநிலை மாற்றத்தின் காரணமாக காற்றில் காணப்படும் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு ஆனது, புல்வெளிகளில் ஆழமாக வேரூன்றிய மரச்செடி கள் அதிகரிக்க வழிவகுக்கிறது.
வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகரிப்பானது, புற்களுக்குப் பதிலாக மரங்களின் வளர்ச்சியினை மேம்படுத்தும், ஏனெனில் மரங்கள் பயன்படுத்தும் C3 ஒளிச்சேர்க்கைப் பாதையானது அதிக CO2 உள்ள சூழ்நிலைகளில் மேற்கொள்ளப் படுகிறது.
ஒரு சூழலமைப்பில் மரங்கள் அதிகப் பரவலில் அமைந்தால், அவை நிழல் மற்றும் தீயைக் கட்டுப்படுத்துவதன் மூலம் புற்களின் வளர்ச்சியினை மேலும் கட்டுப்படுத்தும்.