TNPSC Thervupettagam

மரங்கள் குறித்தக் கணக்கெடுப்பு குறித்து உச்சநீதிமன்றம்

December 30 , 2024 60 days 76 0
  • இந்திய வனக் கணக்கெடுப்பு (FSI) அமைப்பினைப் பணியமர்த்தி தேசிய தலைநகரில் மர ஆணையமானது மரக் கணக்கெடுப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முன்மொழிந்துள்ளது.
  • மேலும், மரங்களை வெட்டுவதற்கு என்று மர ஆணையத்தின் அலுவலர்கள் கண்மூடித் தனமான அனுமதியை வழங்க அனுமதிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
  • 1994 ஆம் ஆண்டு மரங்கள் சட்டத்தின் கீழ் தேசியத் தலைநகரில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட மரங்களை வெட்டுவதற்கு என்று அதிகாரியால் வழங்கப்படும் ஒவ்வொரு அனுமதியும், முதலில் மத்திய அரசினால் அதிகாரமளிக்கப்பட்ட ஒரு குழுவினால் (CEC) சரி பார்க்கப்பட்டு அனுமதிக்கப்பட வேண்டும்.
  • CEC இறுதியாக அனுமதி வழங்கும் வரை எந்த மரமும் வெட்டப்படக் கூடாது.
  • இங்கு மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை நிராகரிப்பதற்கு அல்லது மாற்றி அமைப்பதற்கு CEC குழுவிற்கு அதிகாரம் உள்ளது.
  • ஓர் அதிகாரி 60 நாட்களுக்கு மேல் தனது முடிவைத் தாமதப்படுத்தினால், சம்பந்தப் பட்ட விண்ணப்பதாரர் மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டதாகக் கருதலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்