மரங்கள் குறித்தக் கணக்கெடுப்பு குறித்து உச்சநீதிமன்றம்
December 30 , 2024 60 days 75 0
இந்திய வனக் கணக்கெடுப்பு (FSI) அமைப்பினைப் பணியமர்த்தி தேசிய தலைநகரில் மர ஆணையமானது மரக் கணக்கெடுப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முன்மொழிந்துள்ளது.
மேலும், மரங்களை வெட்டுவதற்கு என்று மர ஆணையத்தின் அலுவலர்கள் கண்மூடித் தனமான அனுமதியை வழங்க அனுமதிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
1994 ஆம் ஆண்டு மரங்கள் சட்டத்தின் கீழ் தேசியத் தலைநகரில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட மரங்களை வெட்டுவதற்கு என்று அதிகாரியால் வழங்கப்படும் ஒவ்வொரு அனுமதியும், முதலில் மத்திய அரசினால் அதிகாரமளிக்கப்பட்ட ஒரு குழுவினால் (CEC) சரி பார்க்கப்பட்டு அனுமதிக்கப்பட வேண்டும்.
CEC இறுதியாக அனுமதி வழங்கும் வரை எந்த மரமும் வெட்டப்படக் கூடாது.
இங்கு மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை நிராகரிப்பதற்கு அல்லது மாற்றி அமைப்பதற்கு CEC குழுவிற்கு அதிகாரம் உள்ளது.
ஓர் அதிகாரி 60 நாட்களுக்கு மேல் தனது முடிவைத் தாமதப்படுத்தினால், சம்பந்தப் பட்ட விண்ணப்பதாரர் மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டதாகக் கருதலாம்.