2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமானது இந்திய சட்ட ஆணையத்தை (Law Commission of India) மரண தண்டனையானது ஓர் குற்றத்தடுப்பு தண்டனையா (deterrent punishment) அல்லது குற்றவியல் செயல்களுக்கான ஓர் தண்டிப்பு நீதியா (retributive justice) அல்லது அது திறனற்றதாக்குகிற அல்லது பயனற்றதாக்குகிற இலக்கை வழங்குகின்ற ஒன்றா (incapacitate goal) என ஆராயுமாறு கேட்டுக் கொண்டது.
நீதிபதி ஏ.பி. ஷா (P.Shah) தலைமையிலான முந்தைய இந்திய சட்ட ஆணையம் 2015-ல் தன்னுடைய அறிக்கையில் தீவிரவாதத்துடன் தொடர்பில்லா வழக்குகளுக்கு (non-terrorism cases) மரண தண்டனை வழங்குவதை ரத்து செய்யவேண்டுமென முன்மொழிந்தது.
இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து தங்களுடைய கருத்தைத் தெரிவிக்குமாறு மாநிலங்களை கோரியது.
மரண தண்டனையை ஒழிப்பதற்கான முன்மொழிவின் மீது மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்த 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுள் கர்நாடகா மற்றும் திரிபுரா ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே மரண தண்டனை நடைமுறையை ரத்து செய்யுமாறு வேண்டியுள்ளன.
மரண தண்டனையை ஒழிப்பதற்கு குஜராத், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், பீஹார், தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு (vetoed) தெரிவித்துள்ளன.