TNPSC Thervupettagam

மரபணுத் தகவல் பயன்பாடு குறித்த உலகளாவிய ஒப்பந்தம்

October 31 , 2024 23 days 65 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் 16வது பங்குதாரர்கள் (COP16) இயற்கை உச்சி மாநாட்டில், உறுப்பினர் நாடுகள் ஆனது, எண்ணிம மரபணு வரிசையாக்கத் தகவல் (DSI) என அறியப்படும் இயற்கையிலிருந்து பெறப்படும் மரபணு தகவல்களைப் பயன்படுத்தச் செய்வதற்கான ஒப்பந்தம் குறித்தப் பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள உள்ளன.
  • DSI என்பது உயிரினங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சில மரபணுக் குறியீடுகளின் எண்ணிம உருவமைப்பினைக் குறிக்கிறது.
  • இந்த மரபணு வரிசையாக்கமுறைகள் ஆனது எண்ணிம மயமாக்கப்பட்டு, பொதுத் தரவுத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அனைத்து ஆய்வாளரும் பயன்படுத்தும் வகையில் அவை சேமிக்கப் படுகின்றன.
  • COP16 நாடுகளின் பேச்சுவார்த்தைகள் ஆனது அசல் மாதிரிகள் மற்றும் மாதிரிகளைச் சேதப்படுத்தாமல், இந்த எண்ணிம தகவல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் கவனம் செலுத்துகிறது.
  • DSI தகவலைப் பயன்படுத்தும் முக்கியத் துறைகளின் வருடாந்திர வருமானத்தில் 0.1% முதல் 1% வரையில் விதிக்கப்படும் கட்டணம் ஆனது ஆண்டிற்கு 1 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் வரையிலான வருமானத்தினை ஈட்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்