அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் (Council of Scientific and Industrial Research - CSIR) இரு ஆய்வகங்கள் ஒரு மரபணுத் தொகுதி வரிசையாக்கத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
அந்த இரு ஆய்வகங்கள் பின்வருமாறு :
செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (Centre for Cellular and Molecular Biology - CCMB)
மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் மையம் (Institute of Genomics and Integrative Biology - IGIB)
இவை குறைந்தது 10,000 இந்திய மரபணுத் தொகுதிகளை வரிசையாக்கத் திட்டமிட்டுள்ளன.
மரபணுத் தொகுதிகள் ஒரு ரத்த மாதிரியின் அடிப்படையில் வரிசையாக்கப் படவிருக்கின்றன.
இந்தத் திட்டமானது இரண்டு நோக்கங்களைக் கொண்டுள்ளது.
மரபணுக்களின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு அறிவைப் புகட்டுவது.
குடிமக்களின் தனிப்பட்ட மரபுசார்ந்த பண்புகளை நிர்ணயிக்கவும் நோய்க்குரிய தன்மை (மற்றும் பின்னடைவு) ஆகியவற்றைக் கண்டறியவும்.