TNPSC Thervupettagam

மரபணுப் பன்முகத்தன்மைக்காக புலிகளின் இடமாற்றத் திட்டம்

November 6 , 2024 16 days 155 0
  • மகாராஷ்டிராவில் உள்ள தடோபா-அந்தாரி புலிகள் வளங்காப்பகத்தில் இருந்து ஒரு பெண் புலியானது ஒடிசாவில் உள்ள சிமிலிபால் புலிகள் வளங்காப்பகத்திற்கு (STR) இடம் மாற்றப்பட்டுள்ளது.
  • புலிகளின் மீதான இடமாற்றத் திட்டம் ஆனது புலிகள் வளங்காப்பகத்திற்குள் மரபணு வளத்தினை மேம்படுத்துவதற்கான ஒடிசா அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதி ஆகும்.
  • சிமிலிபால் ஆனது இந்தியாவில் கருநிறமிகள் அதிகம் கொண்ட வங்காளப் புலிகள் காணப் படும் ஒரே காட்டு வாழ்விடமாகும்.
  • இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒடிசா புலிகள் மதிப்பீட்டில், சிமிலிபாலில் உள்ள மொத்த 24 இளம் பருவப் புலிகளில் 13 அரிய வடிவங்களைக் கொண்ட கருநிறமிகள் மிக அதிகம் கொண்ட புலிகள் என்று கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்