TNPSC Thervupettagam

மரபணு இந்தியா திட்டம்

February 11 , 2020 1751 days 864 0
  • மரபணு (ஜீனோம்) இந்தியா திட்டம் என்று அழைக்கப்படும் ஒரு லட்சிய மரபணு – குறியாக்கத் திட்டத்திற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • மரபணு என்பது ஒரு உயிரினத்தின் முழுமையான டி.என்.ஏ தொகுப்பைக் குறிக்கின்றது. அதில் அனைத்து மரபணுக்களும் உள்ளடங்கும்.
  • இந்த மரபணுக்களை குறியாக்கம் செய்வது என்பது ஒரு குரோமோசோமில் உள்ள இந்த மரபணுக்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதாகும்.
  • நீர்மத் திசு ழற்சி மற்றும் டுச்சேன் தசைநார் டிஸ்டிராபி போன்ற ஒற்றை மரபணு மரபுவழி கோளாறுகளுக்குக் காரணமான மரபணுக்களைக் கண்டுபிடிக்க இது பயன்படுகின்றது.
  • ஜீனோம் (மரபணு) இந்தியா என்ற திட்டத்தில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science - IISc) மற்றும் ஒரு சில இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களும் கலந்து கொள்ள இருக்கின்றன.
  • ஒரு தன்னாட்சி நிறுவனமான IIScன் மூளை ஆராய்ச்சிக்கான மையமானது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனமாகச் செயல்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்