TNPSC Thervupettagam
April 12 , 2019 2055 days 715 0
  • ஜார்ஜியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 4 வெளிறிய பல்லிகளை உருவாக்குவதற்காக அனோலிஸ் சாக்ரேய் பல்லிகளின் நிறமேற்ற மரபணுக்களை திருத்தியுள்ளனர்.
  • இந்த ஆராய்ச்சியாளர்கள் CRISPR புரதங்களை பல்லிகளின் கருப்பைகளில் உள்ள பல்வேறு முதிர்ச்சியடையாத முட்டைகளில் நுண் உட்செலுத்துதல் மூலம் செலுத்தியுள்ளனர். இது டைரோசீனேஸ் மரபணுவைத் திருத்தம் செய்யும்.
  • சைரோசீனேஸ் மரபணுவானது அதன் வெளிறிய நிறத்திற்குக் காரணமாகும்.
  • இவை சாதாரணப் பல்லிகளிலிருந்து அல்பினோ பல்லிகளை உருவாக்கியுள்ளன.
  • இந்த ஆராய்ச்சிக்காக CRISPR-Cas9 தொழில்நுட்பமானது ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்பட்டது.
CRISPR
  • CRISPR என்பது “குழுக்களாக, ஒழுங்கான இடைவெளியில் அமைந்த, குறுகிய இரு வழிப் பாதை போன்ற அல்லது CRISPR தொடர்புடைய புரதம்-9 அமைப்பு” என்பதைக் குறிக்கும்.
  • CRISPR தொழில்நுட்பம் என்பது பொதுவாக ஒரு மரபணு – திருத்தத் தொழில்நுட்பமாகும். இது மரபணுவின் வெளிப்படுத் திறனை மாற்றுவதற்கும் ஒரு உயிரினத்தின் மரபணுவை மாற்றுவதற்கும் பயன்படுத்தப் படுகின்றது.
  • இது குறைபாடுடைய மரபணுக்களை சரி செய்வது, நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பது மற்றும் நோய்கள் பரவாமல் தடுப்பது, பயிர்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
  • CRISPR-ஐப் பயன்படுத்தி மனிதக் கருக்களைக் கையாளும் போது நெறிமுறை சார்ந்த பிரச்சனைகள் எழுப்பப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்