TNPSC Thervupettagam

மரபணு பன்முகத் தன்மை மற்றும் இனங்களின் இயல்புகள்

July 22 , 2023 367 days 223 0
  • அறிவியல் மற்றம் தொழில்துறை ஆராய்ச்சிச் சபையின் மத்திய செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையமானது (CCMB) மரபணு பன்முகத் தன்மை மற்றும் இனங்களின் இயல்புகள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பினைக் கண்டறிந்து உள்ளது.
  • பூரான் இனங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சிலந்திகள் மற்றும் பூச்சிகள் போன்ற பிற கணுக்காலிகளை விட இவை அதிக மரபணுப் பன்முகத் தன்மையினைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • தெற்கு அரைக்கோளத்தில் மரபணுப் பன்முகத் தன்மை மிகவும் அதிகமாக இருப்பதும் கண்டறியப் பட்டுள்ளது.
  • தெற்கு அட்சரேகைப் பகுதிகளில் காணப்படும் ஒரு பல்லாண்டு காலப் பருவநிலை நிலைத் தன்மை மற்றும் குறைவான பருவநிலை மாற்றம் ஆகியவை அதிக மரபணுப் பன்முகத் தன்மைக்குக் காரணமாக உள்ளன.
  • ஒவ்வோர் இனங்களுக்கிடையேயான புவியியல் தூரம் அதிகரித்துள்ளதையடுத்து, மரபணுப் பன்முகத் தன்மை அதிகரிக்கச் செய்வதால், தொலைதூரப் பகுதிகளுக்கு இடையிலான மரபணுப் பரிமாற்றமானது வரையறுக்கப்பட்டதாக இருப்பதை இது குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்