மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவானது (Genetic Engineering Appraisal Committee - GEAC), மரபணு மாற்றப்பட்ட கடுகான தாரா கலப்பின கடுகின் (Dhara Mustard Hybrid→DMH-11) வணிக ரீதியான பயிரிடலுக்கு, அவை அதிகளவிலான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
DMH-11 என்பது மரபணு மாற்றப்பட்ட கடுகாகும். இந்தக் கடுகானது, டெல்லி பல்கலைக்கழகத்திலுள்ள பயிர் தாவரங்களின் மரபணு பெருக்கத்திற்கான மையத்தைச் சேர்ந்த அறிஞர் குழுவினால் உருவாக்கப்பட்டது. இந்த முயற்சியானது, டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான திரு.தீபக் பென்ந்தால் அவர்களின் தலைமையில் மத்திய அரசால் நிதியளிக்கப்படும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
DMH-11 பூச்சிக்கொல்லிகளைக் தாங்கக் கூடிய மரபணு மாற்றப்பட்ட கடுகின் வகையாகும்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் GEAC ஆனது, தீமை விளைவிக்கும் நுண்ணுயிரினங்கள் /மரபணுப் பொறியியலால் உருவாக்கப்பட்ட உயிரினங்கள் மற்றும் செல்கள் ஆகியவற்றின் உற்பத்தி, பயன்பாடு, ஏற்றுமதி, இறக்குமதி, சேமிப்பு ஆகியவற்றை முறைப்படுத்தும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.