TNPSC Thervupettagam

மரபணு மாற்றப்பட்ட பருத்தி வகையின் பயன்கள் – பஞ்சாப்

June 25 , 2021 1158 days 497 0
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் வேளாண் விரிவாக்கப் பிரிவின் நிதியுதவி பெற்ற ஓர் ஆய்வினை இந்தியாவின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்டு உள்ளனர்.
  • இதுஒருங்கிணைந்த பூச்சித் தடுப்பு மேலாண்மைத் தொழில்நுட்பத்தின் தாக்க மதிப்பீடுஎனும் கூடுதல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகும்.
  • இந்த ஆய்வின்படி,
    • மிக அதிக அபாயகரமான மற்றும் ஆபத்தான பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு காலப் போக்கில் குறைந்துள்ளது.
    • பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டுடன் தொடர்புடைய செலவினங்களும் வெகுவாக குறைந்துள்ளன.
    • 2015 ஆம்  ஆண்டைத் தவிர கடந்த 13 ஆண்டுகளில் பருத்தியின் விளைச்சல் நிலையாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
  • பி.டி. பருத்தி என்பது பூச்சி எதிர்ப்புத் திறனுடைய மரபணு மாற்றப்பட்ட பருத்தி வகை ஆகும்.
  • பி.டி.நச்சுகள் ஆனது அந்துப் பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள், பருத்திப் பூ (பந்து) புழுக்கள், ஈக்கள் மற்றும் வண்டுகள் ஆகியவற்றிற்கு உயிர்க்கொல்லியாக செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்