மரபணு மாற்றியமைக்கப்பட்ட பயிருக்கான பாதுகாப்பு ஒப்புதல்
May 16 , 2023 561 days 258 0
மரபணு மாற்றியமைக்கப்பட்ட சோயா அவரை மிகவும் பாதுகாப்பானது என சீனா அங்கீகரித்துள்ள நிலையில், இது ஒரு பயிர் சார் தொழில்நுட்பத்திற்கு அது வழங்கிய முதல் ஒப்புதலாகும்.
உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக சீனா மிக அதிகளவில் அறிவியலைச் சார்ந்து வருகிறது.
இந்த சோயா அவரை வகையானது தனியாருக்குச் சொந்தமான ஷான்டாங் ஷுன்ஃபெங் பயோடெக்னாலஜி கோ லிமிடெட் மூலம் உருவாக்கப்பட்டது.
இது தாவரத்தில் ஒலிக் அமிலம் என்ற ஆரோக்கியமான ஒரு கொழுப்பின் அளவை கணிசமான அளவில் உயர்த்துகின்ற இரண்டு மாற்றியமைக்கப்பட்ட மரபணுக்களைக் கொண்டுள்ளது.
ஒரு தாவரத்தில் வேற்று மரபணுக்களை உட்செலுத்தும் மரபணு மாற்றம் போல அல்லாமல், மரபணுத் திருத்தம் என்பது ஏற்கனவே உள்ள மரபணுக்களை மாற்றி அமைக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த காலிக்ஷ்ட் என்ற நிறுவனமும் ஆரோக்கியமான எண்ணெயை உற்பத்தி செய்யும் வகையிலான மிக அதிகளவு ஒலிக் அமிலம் கொண்ட ஒரு சோயா அவரையினை உருவாக்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட முதல் மரபணு மாற்றி அமைக்கப் பட்ட உணவு இதுவாகும்.
ஆரோக்கியமான தக்காளி மற்றும் வேகமாக வளரும் மீன் உள்ளிட்ட மரபணு மாற்றி அமைக்கப்பட்ட உணவுகளுக்கு ஜப்பான் அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.