140 ஆண்டுகளாக காணப்படாத மரப் பாம்புகள் இனமானது (சைலோபிஸ் இண்டிகஸ்) தமிழ்நாட்டின் மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மீண்டும் காணப்பட்டது.
இந்த மரப் பாம்பு இனங்கள் மேக மலை வனப்பகுதி மற்றும் பெரியார் புலிகள் காப்பகம் ஆகியவற்றில் பரவிக் காணப்படுகின்றன.
மரப் பாம்புகளின் உள்ளூர் இனமானது கடைசியாக 1878 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி மற்றும் இயற்கை ஆர்வலரான ரிச்சர்ட் ஹென்றி பெட்டோம் என்ற படைத் தளபதியால் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது.