மத்திய வன, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுபாட்டு அமைச்சகம் நில அறிவியல் பயன்பாட்டிற்கு கூட்டு முயற்சியின் கீழ் மரம் நல்லது (Wood is Good) என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
நீடித்த நிலவமைப்பு மற்றும் வன சூழியலமைப்பு: நடைமுறைக் கோட்பாடு (Sustainable landscape and forest ecosystem: Theory of practice) என்ற இரண்டு நாள் மாநாட்டின் ஒரு பகுதியாக இப்பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
உற்பத்தியின் போது கார்பன் அடிச்சுவடுகளை (Carbon footprints) வெளியிடும் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் (நெகிழி) போன்றவற்றுக்கு மாற்றாக, கார்பன் நடுநிலையுடைய பருவநிலையோடு நட்பு போக்குடைய மூலவளமான மரங்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.