மகாராஷ்டிரா அரசானது சமீபத்தில் மராத்தா இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றி இருக்கின்றது.
இந்த மசோதாவின் படி மகாராஷ்டிராவானது மராட்டியர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்குவதற்காக சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பு (socially and educationally backward class- SEBC) என்ற புதிய வகுப்பை உருவாக்கும்.
இந்த இட ஒதுக்கீடானது ஒரு ‘அசாதாரண சூழ்நிலையை’ மேற்கோள் காட்டி OBC (Other Backward Classes) எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது மராத்தியர் ஆகியோரின் உரிமைகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது ஓய்வு பெற்ற நீதிபதி NG கெய்க்வாட் தலைமையிலான மகாராஷ்டிர மாநில பின்தங்கிய வகுப்பினர் ஆணையத்தினால் பரிந்துரைக்கப்பட்டது.