TNPSC Thervupettagam

மராத்வாடா விடுதலை நாள் - செப்டம்பர் 17

September 19 , 2022 706 days 269 0
  • இந்திய ஒன்றியத்துடன் ஹைதராபாத் இணைக்கப் படுவதற்கு வழி வகுத்த போலோ நடவடிக்கையின் ஆண்டு நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • இன்றைய மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியானது, நிஜாமின் ஆட்சியின் கீழ் இருந்த அன்றைய ஹைதராபாத் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
  • ஹைதராபாத் நிஜாம், மிர் ஒஸ்மான் அலி கான், ஒரு சுயராஜ்ய முடியாட்சியாகவோ அல்லது பிரிட்டிஷ் பேரரசின் பாதுகாவலின் கீழ் மட்டுமே தனது ஆட்சியைத் தொடர விரும்பினார்.
  • மேலும் அவர் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ சேர விரும்பவில்லை.
  • மறுபுறம் பிரிட்டிஷ் அரசாங்கமானது ஹைதராபாத்திற்கு எந்த விதமான இறையாண்மையையும் வழங்க மறுத்தது.
  • ஹைதராபாத் மக்கள் பெரும்பாலும் இந்துக்கள் என்பதால் அவர்கள் இந்தியாவுடன் மீண்டும் இணைய விரும்பினர்.
  • நிஜாம் ஒரு முஸ்லீம் என்பதால் அவர் இந்திய ஒன்றியத்தில் சேர தயங்கினார்.
  • அதிகாரத்தைத் தக்க வைக்க, ரசாகர்கள் என்று அழைக்கப்படும் ஒரு தனியார் போராளிக் குழுவை உருவாக்குவதற்கும் அவர் அனுமதி வழங்கினார்.
  • இறுதியில் இந்தியா மற்றும் ஹைதராபாத் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
  • இந்தியா ஹைதராபாத் மீது ஆபரேஷன் போலோ என்ற ஒரு இராணுவ நடவடிக்கையினைத் தொடங்கியது.
  • 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று நிஜாமின் இராணுவம் அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
  • மேலும் ஹைதராபாத் மாநிலம் இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்