TNPSC Thervupettagam

மருத்துவ மற்றும் வாசனைப் பொருட்கள் மீதான குழு

February 27 , 2018 2336 days 655 0
  • வடகிழக்கு பிராந்தியத்திற்கான மருத்துவ மற்றும் வாசனை திரவிய தாவரங்கள் (Medical and Aromatic Plants - MAPs) மீதான அமைச்சகங்களுக்கிடையேயான குழுவின் (Inter-Ministerial Committee-IMC) முதல் சந்திப்பு மார்ச் மாதம் 12 தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஆயுஷ் (AYUSH) அமைச்சகம் மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை (DoNER - Development of North-East Region) ஆகியவற்றினுடைய செயலாளர்களின் தலைமையில் இச்சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
  • வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இந்த சந்திப்பை ஒருங்கிணைக்க உள்ளது.
  • வடகிழக்கு பிராந்தியத்திலுள்ள மருத்துவ மற்றும் வாசனை திரவிய தாவரங்களின் மூல ஆதாரத்தை நீடித்த முறையில் உற்பத்தி மற்றும் மேலாண்மை செய்து அதன் மூலம் வடகிழக்கு இந்திய மக்களின் பொருளாதார நிலைமை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான செயல் திட்டங்களை பரிந்துரை செய்ய இச்சந்திப்பு நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்