TNPSC Thervupettagam

மருந்தாக்கவியல் (திருத்தம்) மசோதா, 2023

August 18 , 2023 339 days 226 0
  • இந்த மசோதாவானது மருந்தாக்கவியல் நடைமுறை மற்றும் தொழில்முறையை ஒழுங்குபடுத்துகின்ற 1948 ஆம் ஆண்டு மருந்தாக்கவியல் சட்டத்தினைத் திருத்தி அமைக்கிறது.
  • இந்தியாவில் மருந்தாக்கவியல் தொழில்முறையை மேற்கொள்வதற்கு 1948 ஆம் ஆண்டு மருந்தாக்கவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்தல் கட்டாயமாகும்.
  • 2011 ஆம் ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீர் மருந்தாக்கவியல் சட்டத்தின் கீழ், பதிவு செய்யப் பட்ட அல்லது தகுதி பெற்ற நபர்கள் தொடர்பான சிறப்பு விதிகளை வழங்கச் செய்வதற்காக 32C என்ற புதிய சட்டப் பிரிவினை இந்த மசோதா சேர்க்க உள்ளது.
  • 2011 ஆம் ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீர் மருந்தாக்கவியல் சட்டத்தின் கீழ், மருந்தாளராகப் பதிவு செய்யப்பட்ட அல்லது 2011 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப் பட்ட தகுதிகளைப் பெற்றுள்ள எவரும் 1948 ஆம் ஆண்டு இயற்றப் பட்ட மருந்தாக்கவியல் சட்டத்தின் கீழ் மருந்தாளுநராகப் பதிவு செய்யப்பட்டதாகக் கருதப் படுவர்.
  • வழக்கற்றுப் போன அல்லது பிற சட்டங்களால் தேவையற்றதாக அறிவிக்கப்பட்ட 65 சட்டங்களை ரத்து செய்ய இந்த மசோதா முயல்கிறது.
  • இது 2011 ஆம் ஆண்டு கணக்கு விவர வர்த்தக ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள ஒரு சிறிய வரைவுப் பிழையையும் சரிசெய்ய முயல்கிறது.
  • இந்த மசோதாவின் முதல் அட்டவணையானது ரத்து செய்யப்பட உள்ள 24 சட்டங்களைப் பட்டியலிடுகிறது.
  • இவற்றில் 16 சட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டச் சட்டங்கள், மற்றும் இரண்டு சட்டங்கள் 1947 ஆம் ஆண்டிற்கு முந்தையவை ஆகும்.
  • இந்த மசோதாவின் இரண்டாவது அட்டவணையானது ரத்து செய்யப்பட உள்ள 41 ஒதுக்கீட்டுச் சட்டங்களைப் பட்டியலிடுகிறது.
  • இரயில்வே நிர்வாகத்திற்கான 18 ஒதுக்கீட்டுச் சட்டங்களும் இதில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்