TNPSC Thervupettagam

மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகள் திருத்தம் - 2025

January 16 , 2025 4 days 55 0
  • 1945 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் M அட்டவணையின் திருத்தப்பட்டத் தரநிலைகளை அமல்படுத்துவதற்கான தேதியை மத்திய சுகாதார அமைச்சகம் திருத்தி அறிவித்துள்ளது.
  • மருந்து உற்பத்தித் துறைகள் இந்த விதிகளுக்கு இணங்குவதற்கு கூடுதலாக என்று 12 மாதங்கள் அவகாசம் அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அட்டவணை M என்பது 1945 ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதோடு, இது இந்தியாவில் மருந்துப் பொருட்களுக்கான சீர்தர உற்பத்தி நடைமுறைகளை (GMP) குறிப்பிடுகிறது.
  • இது உற்பத்திச் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் வளாகங்கள், ஆலைகள் மற்றும் உபகரணங்களுக்கான தேவைகளை உள்ளடக்கியது.
  • நாட்டில் சுமார் 10,500 உற்பத்தி அலகுகள் உள்ளன, அவற்றில் சுமார் 8,500 அலகுகள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் (MSME) என்ற பிரிவின் கீழ் வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்