மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகள் திருத்தம் - 2025
January 16 , 2025 43 days 108 0
1945 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் M அட்டவணையின் திருத்தப்பட்டத் தரநிலைகளை அமல்படுத்துவதற்கான தேதியை மத்திய சுகாதார அமைச்சகம் திருத்தி அறிவித்துள்ளது.
மருந்து உற்பத்தித் துறைகள் இந்த விதிகளுக்கு இணங்குவதற்கு கூடுதலாக என்று 12 மாதங்கள் அவகாசம் அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அட்டவணை M என்பது 1945 ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதோடு, இது இந்தியாவில் மருந்துப் பொருட்களுக்கான சீர்தர உற்பத்தி நடைமுறைகளை (GMP) குறிப்பிடுகிறது.
இது உற்பத்திச் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் வளாகங்கள், ஆலைகள் மற்றும் உபகரணங்களுக்கான தேவைகளை உள்ளடக்கியது.
நாட்டில் சுமார் 10,500 உற்பத்தி அலகுகள் உள்ளன, அவற்றில் சுமார் 8,500 அலகுகள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் (MSME) என்ற பிரிவின் கீழ் வருகின்றன.