மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையானது (2013) ஆண்டுக்கு ரூபாய் 12,447 கோடி ரூபாய் பணத்தைச் சேமிக்க உதவியுள்ளது.
மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணை என்பது இந்திய அரசாங்கத்தால் அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955 என்ற சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு உத்தரவாகும்.
இந்த உத்தரவானது மருந்துகளின் விலையை நிர்ணயிப்பதற்கான விவரங்கள், விலையை அதிகரிக்க அல்லது குறைப்பதற்கான நடைமுறைகள், ஆணையை மீறினால் செலுத்த வேண்டிய அபராதம் முதலிய தகவல்களை வழங்குகிறது.
இந்த உத்தரவானது மருந்துகளின் அதிகபட்ச விலையை நிர்ணயிக்க தேசிய மருந்து விலை ஆணையத்திற்கு அதிகாரம் அளித்துள்ளது.
தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகளின் விலைகளை மட்டுமே நிர்ணயிக்க தேசிய மருந்து விலை ஆணையத்திற்கு அனுமதி உள்ளது.
இந்த பட்டியலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2011 ஆம் ஆண்டில் தயாரித்தது.