TNPSC Thervupettagam

மறுசீரமைக்கப்பட்ட தேசிய மூங்கில் திட்டம்

April 28 , 2018 2406 days 814 0
  • 14-வது நிதிக் குழுவின் மீதமுள்ள பணிக் காலத்திற்கு (2018-20) பொருளாதார விவகாரங்கள் மீதான அமைச்சரவையானது (Cabinet Committee on Economic Affairs-CCEA) மறுசீரமைக்கப்பட்ட தேசிய மூங்கில் திட்டத்தை (restructured National Bamboo Mission -NBM)  அனுமதித்துள்ளது.
  • மறுசீரமைக்கப்பட்ட தேசிய மூங்கில் திட்டமானது நீடித்த வேளாண்மைக்கான தேசிய திட்டத்தின் (National Mission for Sustainable Agriculture-NMSA) கீழ் செயல்படும் ஓர் மத்திய நிதியுதவி திட்டமாகும் (Centrally Sponsored Scheme).
  • தேசிய மூங்கில் திட்டத்திற்கு வழிகாட்டுதல்களை வகுப்பதற்கும், திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கும் நிர்வாகிகள் குழுவின் (Empowerment of Executive Committee)  அதிகாரமளிப்பிற்கும்  (Empowerment of Executive Committee)    பொருளாதார விவகாரங்கள் மீதான  அமைச்சரவையானது     அனுமதி வழங்கியுள்ளது.
  • மறுசீரமைக்கப்பட்ட தேசிய மூங்கில் திட்டமானது ஒருசில மாநிலங்களில் அதாவது எந்தெந்தப் பகுதிகளில் மூங்கில்கள் சமூக, வர்த்தக மற்றும் பொருளாதார நன்மைகளைக் (social, commercial and economical advantage)  கொண்டுள்ளனவோ அந்த வரம்புக்குட்பட்ட மாநிலங்களின் மூங்கில் துறையின்  மேம்பாட்டின் மீது கவனம் செலுத்தும்.
  • இதன்படி மறு சீரமைக்கப்பட்ட தேசிய மூங்கில் வளர்ச்சித் திட்டமானது குறிப்பாக வட கிழக்கு மாநிலங்கள் மீதும், தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், தெலுங்கானா, பீகார், ஜார்கண்ட், ஓடிஸா போன்ற மாநிலங்கள் மீதும் கவனம் செலுத்தும்.
  • மத்திய நிதியுதவித் திட்டமான தேசிய மூங்கில் திட்டம்  2006-2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2014-2015 ஆண்டு காலத்தில் தோட்டக்கலையின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்கான திட்டத்தின் (Mission for Integrated Development of Horticulture-MIDH) கீழான ஒன்றாக இது செயல்படுத்தப்பட்டது. மேலும் இத்திட்டம் 2015-16 வரை தொடரப்பட்டது.
  • பகுதிகள் அடிப்படையிலான பிராந்திய அளவில் வேறுபட்ட உத்திகள் (area based regionally differentiated strategy) மூலம் நாட்டில் மூங்கில் துறையின் வளர்ச்சியை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்