TNPSC Thervupettagam

மறுபயன்பாட்டு ஏவுகல வாகனத்தின் சோதனை

April 8 , 2023 599 days 267 0
  • இஸ்ரோ நிறுவனமானது, இந்திய விமானப் படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து மறுபயன்பாட்டு ஏவுகல வாகனத்தின் தானியங்குத் தரையிறக்கச் சோதனையினை (RLV LEX) கர்நாடகாவின் சித்ரதுர்காவில் வெற்றிகரமாக நடத்தியது.
  • இந்தச் சோதனையானது, மீண்டும் பயன்படுத்தக் கூடிய ஏவுகலங்கள் அல்லது விண்கலங்கள்/விண்வெளிப் பெட்டகங்களை உருவாக்குவதற்கான இஸ்ரோவின் முயற்சிகளின் ஒரு பகுதியான ஐந்து சோதனைகளில் இரண்டாவது சோதனையாகும்.
  • இவை புவித் தாழ்மட்டச் சுற்றுப்பாதைகளுக்குச் சென்று விண்வெளிப் பொருட்களை நிலை நிறுத்திய பிறகு, மீண்டும் பயன்படுத்தப்படும் வகையில் பூமிக்குத் திரும்பக் கூடியவையாகும்.
  • RLV-TD (HEX1) ஏவுகலத்தின் முதல் சோதனையில், ஏவு வாகனம் ஆனது வங்காள விரிகுடாவில் ஒரு தற்காலிக ஓடுபாதையில் தரையிறங்கியது.
  • 2வது LEX பரிசோதனையில், ஏவு வாகனமானது ஒரு துல்லியமான ஓடுபாதையில் தரையிறக்கப் பட்டது.
  • இன்னும் ஏவு வாகனம் புவிக்குத் திரும்புதல் குறித்தப் பரிசோதனை (REX), இயக்கத்தின் போது விண்வெளிப் பயண நிலை குறித்தப் பரிசோதனை மற்றும் ஸ்க்ராம்ஜெட் உந்து விசைப் பரிசோதனை (SPEX) ஆகிய மூன்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்