இந்தியாவிலேயே முதன்முறையாக ஜார்க்கண்ட் மாநில அரசானது, ‘வித்வா புனர் விவாஹ் ப்ரோட்சஹன் யோஜனா’ (விதவை மறுமண ஊக்குவிப்புத் திட்டம்) என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இதன் கீழ், தனது கணவர் இறந்த பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்களுக்கு, அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற, ஒரு பயனாளி திருமண வயதுடையவராக இருக்க வேண்டும் மற்றும் அரசு ஊழியர், ஓய்வூதியம் பெறுபவர் அல்லது வருமான வரி எதுவும் செலுத்துபவராக இருக்கக் கூடாது.