TNPSC Thervupettagam

மறுமுறை பயன்படுத்தக் கூடிய தண்ணீர் குடுவைகளுக்கு ISI தரக் குறியீடு

September 9 , 2023 315 days 233 0
  • மறுமுறை பயன்படுத்தக்கூடிய தண்ணீர் குடுவைகள் மற்றும் பல்வேறு மூலப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பாத்திரங்கள் ஆகியவற்றினை ISI முத்திரை இல்லாமல் தமிழகத்தில் விற்பனை செய்ய முடியாது என்ற விதிமுறை விரைவில் அறிமுகப் படுத்தப்பட உள்ளது.
  • இந்தியத் தர நிர்ணய வாரியமானது (BIS) தரமற்றப் பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்துவதற்காக அந்தத் தயாரிப்புகளுக்கு தரச் சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்கியதோடு, கட்டாயத் தரக் கட்டுப்பாட்டு ஆணையையும் உருவாக்கி உள்ளது.
  • வீடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் வெப்பக் காப்பிடப் பட்ட குடுவைகள் மற்றும் கொள்கலன்கள் கட்டாய BIS சான்றிதழ் பெற வேண்டும் என்ற வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • குழந்தைகளுக்கானப் பால்பொருள் சார்ந்த உணவு, உடனடி காபி, தேநீர் மற்றும் இனிப்பூட்டப் பட்ட சுண்டக் காய்ச்சிய (நீர்ச்சத்து நீக்கப்பட்ட) பால் போன்ற உணவு மற்றும் பானங்களுக்குப் பயன்படுத்தப்படும் வெள்ளீயக் கலன்களுக்கும் தற்போது கட்டாயமாக BIS சான்றிதழைப் பெற வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்