TNPSC Thervupettagam

மலபார் பயிற்சி 2020 – 24வது பதிப்பு

November 1 , 2020 1398 days 562 0
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியா தலைமையிலான மலபார் கடற்படைப் பயிற்சியில் ஆஸ்திரேலியாவும் இணைய இருக்கின்றது.
  • குவாடு (Quad) அல்லது நாற்கரம் எனப்படும் நான்கு பேர் கொண்ட ஒரு குழுவின் முதலாவது பயிற்சி இதுவாகும்.
  • பசிபிக் ஒத்துழைப்பு நாற்கரம் என்பது ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட ஒரு குழுவாகும்.
  • இந்தியாவானது மலபார் பயிற்சியை 1992 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவுடன் இணைந்து நடத்துகின்றது.
  • 2015 ஆம் ஆண்டில் இந்தப் பயிற்சியில் ஜப்பான் ஒரு வருடாந்திரப் பங்கேற்பாளராகப் பங்கேற்றது.
  • இதன் முந்தைய நிரந்தரமற்ற பங்கேற்பாளர் சிங்கப்பூர் ஆகும்.
  • இந்த வருடாந்திரப் பயிற்சியானது 2018 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் குவாம் கடற்கரையிலும் 2019 ஆம் ஆண்டில் ஜப்பான் கடற்கரைப் பகுதியிலும் நடத்தப் பட்டது.
  • இந்த ஆண்டு, இந்தப் பயிற்சியானது வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் ஆகிய பகுதிகளில் நடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்