தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தளி பகுதியில் இந்தியாவும் இஸ்ரேலும் கூட்டிணைந்து சிறப்பு மலரியல் மையத்தை (Centre for Excellence in Floriculture) அமைக்க உள்ளது.
இஸ்ரேல் ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் முதல் வேளாண் – தொழிற்நுட்ப மேம்பாட்டு மையம் இதுவாகும்.
மலரியலுக்கான (Floriculture) இம்மையம் தளி பகுதியிலும், இதே போலான காய்கறிகளுக்கான மையம் ஒன்று தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்திலும் அமைக்கப்பட உள்ளது.
மஸ்ஹாவ் எனும் சர்வதேச மேம்பாட்டு ஒத்துழைப்புக்கான இஸ்ரேலிய நிறுவனம் மற்றும் இந்தியாவின் மத்திய வேளாண் அமைச்சகத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட தோட்டக்கலைக் மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான மூன்று வருட இந்தோ-இஸ்ரேல் வேளாண் ஒத்துழைப்பு திட்டத்தின் (Mission for Integrated Development Of Horticulture) ஒரு பகுதியாக இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன.