மாலாசிடின்ஸ் (Malacidins) எனும் புதிய ஆன்டிபயாடிக் வகுப்பை கண்டுபிடித்திருப்பதாக நியூயார்க்கை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு மண் வகைகளில் இருக்கின்ற மூலக்கூறுகளிலிருந்து இந்த புதிய ஆன்டிபயாடிக் வகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மண் மற்றும் மாசுக்களில் வாழும் நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் இந்த ஆன்டிபயாடிக் ஆனது பல்வேறு நோய் எதிர்ப்புத் திறனுடைய நோய்க்கிருமிகளை அழிக்கும் திறன் வாய்ந்தது.
பிளேக், நிமோனியா, காலரா போன்றவற்றை ஏற்படுத்தும் கிராம் நெகடிவ் பாக்டீரியாக்களுக்கு எதிராக இவை செயல்தன்மையற்றவை.
மிகவும் தடித்த செல் சுவருடைய கிராம் பாசிடிவ் பாக்டீரியாக்களை மட்டுமே இவை எதிர்க்கவல்லன.
மாலாசிடின் தனித்துவ ஆன்டிபயாடிக் வகையாகும். இவை பொதுவாக மண் நுண் உயிர்க்கட்டுகளில் (Soil Micro biomes) குறியீட்டாக்கம் (Encode) செய்யப்படுகின்றன.